டெங்கு மற்றும் காலநிலை
நுளம்புகளின் புவியியல் ரீதியான பரம்பலில் காலநிலை (வெப்பநிலை, மழை மற்றும் ஈரப்பதம்) முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக காலநிலை நோய் பரவும் பருவத்தை நீட்டிக்கிறது, கோனோட்ரோபிக் சுழற்சியைக் குறைக்கிறது மற்றும் உட்சென்ற வைரஸ்கள் தொற்று நிலைகளுக்கு முன்னேற எடுக்கும் நேரத்தை குறைக்கிறது, இதனால் டெங்கு தொற்று விகிதங்கள் அதிகரிக்கும் (சிரிசேனா மற்றும் நூர்டீன், 2014; கோட்டோ மற்றும் பலர், 2013; ஜோஹன்சன் மற்றும் பலர், 2009 சன் மற்றும் பலர்., 2017).
வேளாண்மை மற்றும் பாரம்பரிய நீர் சேமிப்பு நடைமுறைகள் போன்ற மனித நடவடிக்கைகள் தெற்காசிய நாடுகளில் பொதுவானவை, இந்த கூறுகள் மறைமுகமாக காலநிலையுடன் அதிக உணர்திறன் கொண்டவை. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக மழை மற்றும் அதிக ஈரப்பதம் கொண்ட நிலைகள் அதிக தட்பவெப்ப உணர்திறன் கொண்ட தெற்காசிய பிராந்தியமானது டெங்கு பரவலுக்கான மிகவும் பொருத்தமான நிலையை வழங்குகிறது. (ரஹீல் மற்றும் பலர், 2010; சன் மற்றும் பலர், 2017).
இலங்கையில் டெங்கு நோய் தரவு மற்றும் காலநிலை தரவுகளின் பகுப்பாய்வு குறித்த முதற்கட்ட ஆய்வுகள்; மழை, வெப்பநிலை மற்றும் டெங்கு பாதிப்புக்கு இடையிலான தொடர்பை 1-2 மாதங்கள் தாமதமாகவே காட்டுகிறது (குசுமாவதி, சுபைர் மற்றும் பலர், 2009). இலங்கையின் மேற்கு பகுதியில் டெங்கு பரவும் இரண்டு பருவங்கள் உள்ளன, குறிப்பாக மே, ஆகஸ்ட் முதல் ஜூன்/ ஜூலை மற்றும் அக்டோபர் வரையிலும் நவம்பர் / டிசம்பர் மாதங்களில் உச்ச அளவிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் சிறிய மாறுபாடுகளுடன் இந்த பரவல் காலங்கள் மழையின் பருவகாலத்துடன் தொடர்புடையனவாக உள்ளமைiயும் குறிப்பிடத்தக்கது.
டெங்கு நோயானது, 2-3 ஆண்டுகள் இடைவெளியில் இடைப்பட்ட தொற்றுநோய்களுடன் விரைவான அதிகரிப்பைக் காட்டுகிறது. எனவே இத்தகைய காலப்பகுதியானது, தொற்றுநோய்கள் பரவுவதில் அசாதாரண, விரைவான உயர்வின் காலங்களாக புரிந்து கொள்ளப்படுகின்றன.
காலநிலையானது, நுளம்புகளின் உயிரியல், சூழலியல் மற்றும் பயோனமிக்ஸ், வைரஸின் பிரதிபலிப்பு ஆகியவற்றை பாதிக்கும் என்பதால், நோய் பரவுதல் தீவிரம் மழை, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து அமைகின்றது. இவற்றுள் மழைப்பொழிவு மிக முக்கிய இயக்கி என்று ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, நுளம்ப பரவும் இரண்டு பருவகாலங்களும் பருவகால மழையினால் இயக்கப்படுகின்றன, ஏனெனில் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கு தேவையான மேற்பரப்பு நீர் ஏராளமாக கிடைக்க இது வழிவகுக்கிறது. எனினும் புதிய வகைகள் மற்றும் நுளம்புகளின் கிளையினங்கள் போன்ற காரணிகளால் இந்த தாக்கத்தை குழப்ப முடியும்.