காசநோய்

காசநோயானது பொதுவாக நுரையீரலை தாக்கக்கூடிய தொற்றாகும்.

 

இலங்கையில் காசநோய்

மாவட்ட வாரியாக வருடாந்திர காசநோய் 2012 முதல் 2019 வரை

Districtwise_Annual_TB_2012_2019

சாராம்சம்

காசநோய் என்பது பொதுவாக நுரையீரலை தாக்கக்கூடிய மைக்ரோ பாக்டீரியத்தினால் ஏற்படுகின்ற தொற்றாகும். இலங்கையில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான பாதிப்பினை கொண்ட இத்தொற்றானது, வெப்பநிலை மற்றும் காற்றின் வேக அதிகரிப்புடன் அதிகரிக்கும் இயல்புடையது. இலங்கையில் காசநோய் கட்டப்பாட்டுக்கும், முகாமை செய்வதற்கும் தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டப்பாட்டு நிகழ்ச்சி திட்டமானது (NPTCCD)  ஒரு மத்திய அமைப்பாக செயற்பட்டு வருகின்றது.

அறிமுகம்

காசநோய் என்பது காற்றினால் பரவக்கூடிய, மைக்ரோ பாக்டீரியத்தினால் ஏற்படுகின்ற நீடித்த காலத்திற்கு தாக்கக்கூடிய தொற்றாகும். இந்நோய்த்தொற்றானது, நோய்த்தாக்கம் மிக்க துகள்களை தனிப்பட்ட நபர்கள் உள்ளீர்ப்பதன் மூலம் பரவலடைகின்றது. காசநோயானது பிரதானமாக நுரையீரலை தாக்கினாலும் மூலை, சிறுநீரகம் மற்றும் முதுகெழும்பு முதலான பல்வேறு உடல் பாகங்களையும் பாதிக்கவும் செய்கின்றது. நோய்த்தடுப்பிற்கான தடுப்பூசி பாவனையில் உள்ள போதிலும் இலங்கையிலும், சர்வதேசத்திலும் கணிசமானளவு நோய்த்தாக்கம் பதிவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உடற்கூறியலின்அடிப்படையில்காசநோயின்வகைகள்

  • நுரையீரல் காசநோய்

யாதாயினும் நுண்ணுயிரியல் சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்ட, நுரையீரலுடன் தொடர்புடைய மற்றும் ஏனைய உடல் பாகங்களுடன் தொடர்பு கொண்டிராத  மருத்துவ சோதனைகளினால் இணங்காணப்பட்ட காசநோய் வகை இதுவாகும்.

  • மேலதிக நுரையீரல்காசநோய்

யாதாயினும் நுண்ணுயிரியல் சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்ட, இணங்காணப்பட்ட நுரையீரல் தவிர்ந்த பிற உடல் பாகங்களான  உட்தசைகள், நிணநீர் சுரப்பிகள், வயிறு, சிறுநீரக பாதை, தோல், எண்புகள், கணுக்கள் மற்றும் முள்ளந்தண்டு முதலானவற்றுடன் தொடர்புடைய நோய்த்தொற்றாகும்.

இலங்கையின்காசநோய்தொடர்பிலானஅண்மையநிலமைகள்

உலக சுகாதார தாபனத்தின் மதிப்பீட்டின்படி இலங்கை 21.4 மில்லியன் சனத்தொகையும், மிகவும் குறைந்தளவிலான காசநோய் தாக்கம் உடைய நாடாகவும் உள்ளது. இதன்படி, 1 இலட்சம் பேருக்கு மதிப்பிடப்பட்ட காசநோய் நிகழ்வுகள் 64 ஆகவும், MDR காசநோய் நிகழ்வுகள் 0.42 ஆகவும், காசநோய் /HIV  நிகழ்வுகள் தவிர்த்து  HIV/ காசநோய் நிகழ்வுகள் 3.2 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் உண்மையாக மதிப்பிடப்பட்ட காசநோய் நிகழ்வுகள் 1 இலட்சம் பேருக்கு 47 ஆக பதிவானது. இது ஒட்டமொத்த நிகழ்வுகளில் 3000 முதல் 4000 வரையிலான ஓரு இடைவெளிக்கும் வித்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் 8856 தொற்றாளர்கள் அறிவிக்கப்பட்டனர் (முன்னைய ஆண்டில் 85511). இதில் அனைத்து வகையான காசநோய் தாக்கம் கொண்ட 4181 தொற்றாளர்கள் (47 விழுக்காடு) நுண்ணுயிரியல் சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தனர். மேலும் மேலதிக நுரையீரல் காசநோய் தொடர்பில் 2431 நிகழ்வுகள் (27 விழுக்காடு) உறுதிசெய்யப்பட்டதுடன், 591 (6.7 விழுக்காடு) சிகிச்சை பெற்றவர்களாகவும் இருந்தனர். இவற்றுள் மேல் மாகாணத்தில் (40 விழுக்காடு) அதிகளவான தொற்றுக்களும், கொழும்பு மாவட்டத்தில் 25 விழுக்காடுகளும் பதிவாகியிருந்தன. இதில் சிறுவர்கள் குறிப்பிடத்தக்களவில் 3 விழுக்காடளவில்; உள்ளடங்கியிருந்தமையையும் காணலாம்.

இலங்கையில் காசநோய்

படம் 1 : மாவட்ட அடிப்படையிலான 100 000 பேருக்கான தொற்று நிகழ்வு. மூலம் : NPTCCD.

சராசரிகாலாண்டுகாசநோய்நிகழ்வுகள்

படம் 2 : காலாண்டு அடிப்படையிலான மாவட்ட அடிப்படையிலான சராசரி புதிய நோய்தொற்று நிகழ்வுகள்  (2013-2017)

2013 – 2017 வரையிலான காசநோய் தொடர்பிலான காலாண்டு தரவு பகுப்பாய்வகளின் படி,

• 1 வது காலாண்டில் – அதிகளவான சராசரி நோய்த்தாக்கம் முறையே கொழம்பு, கம்பஹா, கண்டி,
இரத்தினபுரி, காலி மற்றும் குருணாகலை மாவட்டங்களிலும்,

• 2 வது காலாண்டில் – அதிகளவான சராசரி நோய்த்தாக்கம் முறையே கொழம்பு, கம்பஹா, கண்டி,
இரத்தினபுரி, குருணாகலை மற்றும் காலி மாவட்டங்களிலும்,

• 3 வது காலாண்டில் – அதிகளவான சராசரி நோய்த்தாக்கம் முறையே கொழம்பு, கம்பஹா,
குருணாகலை, காலி, கண்டி, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும்

• 4 வது காலாண்டில் – அதிகளவான சராசரி நோய்த்தாக்கம் முறையே கொழம்பு, கம்பஹா, கண்டி,
குருணாகலை, காலி, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவதானிக்க முடிகின்றது.

• கொழும்பு மாவட்டம் நோய்த்தொற்றில் 4 வது காலாண்டில் உச்சத்தினை தொட்டுள்ளது.

• ஒட்டுமொத்தமாக, அதிகளவான சராசரி நோய்த்தாக்கம் முறையே கொழம்பு, கம்பஹா
மாவட்டங்களிலும், நோய்த்தாக்கம் மிகவும் குறைவாக முறையே கிளிநொச்சி, மன்னார் மற்றும்
முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது.

• ஏனைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது மூன்றாம் காலாண்டானது, அதிகளவான சாராசரி
நோய்த்தொற்று நிகழ்வுகளை காட்டுகின்ற அதேவேளை இரண்டாம் காலாண்டு குறைவான
நோய்த்தொற்று நிகழ்வுகளை காட்டுகின்றது.

2013 – 2017 வரையிலான காலப்பகுதியில் மொத்த நோய்த்தொற்று நிகழ்வுகளின் எண்ணிக்கையானது 1599 – 2098 எனும் வீச்சினில் அடங்கியுள்ளது. அதியுயர்வாக 2017 அம் ஆண்டின் நான்காம் காலாண்டிலும், மிகவும் குறைவாக 2014 ஆம் ஆண்டின்  இரண்டாம் காலாண்டிலும் நோய்த்தொற்று பதிவாகியுள்ளது (படம் 3).

படம் 3 : 2013 – 2017 வரையிலான காலாண்டு அடிப்படையிலான காசநோய் நிகழ்வுகள்

காலநிலைமற்றும்சூழல்மாசடைதலின்காசநோய்மீதானதாக்கம்

காசநோய் அறிவிப்புக்கள் சில ஆசிய நாடுகளின் வெப்பநிலை வீச்சோடு இணையாக பரவி காணப்படுகின்றமையை காணலாம். பருவகாலங்கள் காசநோய் பரவலை பல்வேறு வழிகளிலும் ஏற்படுத்தலாம். மழைவீழ்ச்சியும், வெப்பநிலையும் வீட்டினுள் இருக்கும் நேரத்தினை தீர்மானிப்பதன் மூலம் காசநோய் பரவலையும் தீர்மானிக்கின்றது.

பருவகாலங்கள், வேலைச்சுமை மற்றும் நலத்தேடல் பழக்கங்களையும் வடிவமைக்கின்றது. காசநோய் சார் நோய்கள் எற்படும்போது மழைவீழ்ச்சியானது சுகாதார வசதிகளை பெறுவதில் இடையூராக அமைவதுடன், பருவகாலங்கள் வளர்சிதை மற்றும் போசாக்கில் சார்ந்துள்ளமையால் காசநோய் தொற்றுவதில் மிக முக்கிய காரணியாகவுமுள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, காசநோயானது, உள்வாங்கும் வளித்துகள்கள், சல்பர் ஒக்சைட்டு மற்றும் நைதரசன் ஒக்சைட்டு முதலானவற்றுடன் எதிர்க்கணிய தொடர்பினை கொண்டுள்ளது என்பதனை கண்டறிந்துள்ளது. உள்ளீர்க்கும் வளித்துகள்கள் மற்றும் சல்பர் ஒக்சைட்டு மீதான மிகவும் குறைந்தளவிலான கரிசனையின் விளைவாக மழைவீழ்ச்சி, வளிமண்டள அழுத்தங்கள் மற்றும் சார்பளவிலான ஈரப்பதன் என்பன காசநோயுடன் எதிரான தாக்கத்தினை கொண்டுள்ளது. மாறாக, காற்றின் வேகம் பொருளுள்ள வகையில் நேர்க்கணிய இணைபையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் என்பன உள்ளீர்க்கும் வளித்துகள்கள் மற்றும் சல்பர் ஒக்சைட்டு மீதான கரிசனையினை அதிகரிப்பதன் மூலம் நேர்க்கணிய தாக்கத்தினையும்  கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மற்றும் காற்றின் தரம் என்பன காசநோய்க்குறிய சாத்தியமான வழிமுறைகளாகும். முன்னேற்றமுடைய காற்றின் தரம் சீனாவின் பெய்ஜிங் நகரில் காசநோய் தாக்கத்தின் அளவினை குறைப்பதில் பங்களிப்பு செய்கின்றது. இதன் விளைவாக காசநோய் மீதான காலநிலைக்கூறுகளின் தாக்கமானது சுற்றாடலின் தரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது.

காசநோய் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவம்

இலங்கையில் காசநோய் மற்றும் பிற தொற்று நோய்களின் கட்டப்பாட்டுக்கும், முகாமை செய்வதற்கும் சுகாதார அமைச்சின் தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டப்பாட்டு நிகழ்ச்சி திட்டமானது (NPTCDD)  ஒரு மத்திய அமைப்பாக செயற்பட்டு வருகின்றது. இது தனது சேவைகளை இருதய சிகிச்சை நிலையங்களின் வலையமைப்பு, ஆய்வுகூடங்கள், இருதய வைத்தியசாலைகள் மற்றும் தங்குமிட வசதிகள் என்பவற்றின் மூலம் செயற்படுத்துகின்றது. இவ்வமைப்பின் செயற்பாடுகள் யாவும் சுகாhதர சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் என்போரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டதல்களின் கீழ் இடம்பெறுகின்றது. அதிகரித்த தொற்றக்கூடிய காசநோய் நிகழ்வுகளின் காரணமாக காசநோய் மற்றும் தொற்று நிகழ்வுகள் மிக பிரதானமான பொது சுகாதார அக்கறையாக இருந்து வருகின்றது.

தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டப்பாட்டு நிகழ்ச்சி திட்டமானது (NPTCDD)  1910 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டு காசநோய் தொற்று நோய்களின் கட்டப்படுத்துவதிலும், முகாமை செய்வதிலும் முறையான அணுகுமுறைகளை  செயற்படுத்தி வருகின்றது. இவ்வமைப்பு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இருதய நோய் மற்றும் அவற்றின் சுகாதார தாக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வினை பரப்புவதனை நோக்காக கொண்டுள்ளது.

தேசிய கொள்கைகள் (NPTCDD)  – தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டப்பாட்டு நிகழ்ச்சி திட்டம்

  • அனைத்து காசநேயாளர்கள் தொடர்பிலான  அறிவிப்புக்கள்,
  • தேசிய கொள்கை வழிகாட்டதல்களுக்கு அமைவாக காசநோயாளிகளுக்கான இலவச இணங்காணல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகள்,
  • அனைத்து காசநேயாளர்கள் தொடர்பிலான தகவல்களை மாவட்ட இருதய சிகிச்சை நிலையங்களில் பதிவுசெய்தல்,
  • அனைத்து காசநேயாளர்களுக்கும் இலவச நுண்நோக்கியல் சேவைகளுக்கான ஏற்பாடுகள்.
  • முழு சிகிச்கை காலத்தக்குமான புள்ளியிடல் வசதிகள்

நோக்கங்கள் – தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டப்பாட்டு நிகழ்ச்சி திட்டம்

  • அனைத்து காசநோய் மற்றும் பிற தொற்று நோயாளர்களுக்கான செயற்திறனான அடையாளப்படுத்தல் சோதனைகள், சிகிச்கைகள், குணப்படுத்தல் மற்றும் புணர்வாழ்வினை உத்;தரவாதப்படுத்தல்,
  • காசநோய் பரவலை இடைநிறுத்த முயற்சித்தல்,
  • மருந்து தோற்றம் பெறுவதனை எதிர்ப்பதனை தடுத்தல்
  • காசநோய் மற்றும் பிற தொற்று நோய்களின் இழப்பு தொடர்பிலான சமூக மற்றும் பொருளாதார எண்ணிக்கையை குறைவடையச்செய்தல்.

NPTCCD Website: https://www.nptccd.health.gov.lk/

வளங்கள்

சுகாதார அமைச்சின் தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டப்பாட்டு நிகழ்ச்சி திட்டமானது (NPTCDD)  26 மாவட்ட இருதய சிகிச்சை நிலையங்கள்,மற்றும் தீவு முழுவதும் பரவியுள்ள நுண்சோதனை மத்திய நிலையங்கள் ஊடாகவும் காசநோய் கட்டப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  13 காசநோயாளர்களுக்கான தங்குமிட வசதிகளுடன் கூடிய 26 மாவட்ட இருதய சிகிச்சை நிலையங்களும், பத்து படுக்கை வசதிகளுடன் கூடிய ஒரு முன்றாம் நிலை வைத்தியசாலையும் இலங்கையில் காணப்படுகின்றது. மேலும் நாட்டில் 3 தேசிய காசநோய் துணை ஆய்வுகூடங்களும், 4 நடுத்தர காசநோய் துணை ஆய்வுகூடங்களும், 31 புஒ இயந்திரங்களும் காணப்படுகின்றன.

C:\Users\Kailaivasan\Downloads\TB_MicroscopyCentres.jpeg

படம் 4: இலங்கையில் தற்போது செயற்பட்டவரும் நுண்சோதனை மத்திய நிலையங்களின் அமைவிடங்கள். மூலம் : NPTCDD

உசாத்தணைகள்

National Programme for Tuberculosis Control and Chest Diseases, Ministry of Health, Nutrition & Indigenous Medicine Sri Lanka. (2018). Annual Report. http://www.nptccd.health.gov.lk/wp-content/uploads/2020/06/Annual-Report-2018-Mail.pdf 

Zaman K. (2010). Tuberculosis: a global health problem. Journal of health, population, and nutrition28(2), 111–113. https://doi.org/10.3329/jhpn.v28i2.4879

N. Naranbat, P. Nymadawa, K. Schopfer, H. L. Rieder (2009). Seasonality of tuberculosis in an Eastern-Asian country with an extreme continental climate. European Respiratory Journal, 2009.

Zhang, C. Y., & Zhang, A. (2019). Climate and air pollution alter incidence of tuberculosis in Beijing, China. Annals of epidemiology, 37, 71-76.

Mase, S. (2019) RGLC Country Support Mission Report, WHO SEARO. https://www.who.int/docs/default-source/searo/tuberculosis/rglc-report-sri-lanka-2019-july.pdf?sfvrsn=6ef508f7_2