நோய் நிலைமைகள்

தொற்றுநோய்

குறித்த காலப்பகுதியொன்றில் குறிப்பிட்ட மக்கள் தொகைக்குள் அல்லது நாட்டினுள் வரையறுக்கப்படுகிற ஒரு நோய் நிலைமை இதுவாகும். இது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் ஒரு சமூகத்தில் தோற்றம் பெறும் ஒரு நோயின் பரவலாக காணப்படுகிறது

இலங்கையில் கவனிக்கத்தக்க நோய்களின் பட்டியல்

 • கோலரா
 • பிளேக் நோய்
 • மஞ்சள் காய்ச்சல்
 • கடுமையான போலியோமைலிடிஸ் / அக்யூட் /பிளாசிட் முடக்கம்
 • சிக்கன் போக்ஸ்
 • டெங்கு காய்ச்சல் / டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல்
 • வயிற்றுப்போக்கு
 • என்செபாலிடிஸ்
 • என்டெரிக் காய்ச்சல்
 • உணவு விஷம்
 • மனித ரேபிஸ்
 • லெப்டோஸ்பிரோசிஸ்
 • தொழுநோய்
 • லீஷ்மானியோசிஸ்
 • மலேரியா
 • தட்டம்மை
 • மூளைக்காய்ச்சல்
 • ரூபெல்லா ஃ பிறவி ரூபெல்லா நோய்க்குறி
 • 7 நாட்களுக்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட எளிய காய்ச்சல்
 • டெட்டனஸ்
 • பிறந்த குழந்தை டெட்டனஸ்
 • டைபஸ் காய்ச்சல்
 • வைரல் ஹெபடைடிஸ்
 • கக்குவான் இருமல்
 • காசநோய்

தொற்றுநோய் 

ஒரு தொற்றுநோய் என்பது ஒரு மக்கள் தொகையில் அல்லது பிராந்தியத்தில் உள்ள ஏராளமான மக்களை பாதிக்கும் ஒரு நோயாகும். இவ்வகை தொற்றுநோய் அந்த பகுதி மக்கள் தொகையில் எதிர்ப்பார்க்கும் சாதாரண மதிப்பை விட ஒரு நோயின் பரவலானது எண்ணிக்கையானது அதிகமானதாகவும்இ திடீரென அதிகரிக்க கூடியதாக இருக்கும். தொற்றுநோய் என்பது மிகவும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதிக்குள் பரவலடையும் தொற்றினை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையில் காணப்படும் தொற்றுநோய்கள்

 • சிக்கன்குனியா 1965 – இது கொழும்பில் தோன்றி 1965 ஆண்டு மே முதல் ஜூன் வரை நீர்கொழும்பு முதல் மாத்தறை தென்மேற்கு கரையோரப் பகுதியில் பரவியது.
 • இலங்கையில் 2006-07 ஆம் ஆண்டில் சிக்குன்குனியா நோயால் 40,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நோயளர்கள் தோன்றினர். இது மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், கல்முனை, மன்னார், புத்தளம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை பாதித்தது. கண்டி, குருநாகலை, மாத்தளை மாவட்டங்கள் இத்தொற்றால் குறைவாகவே பாதிக்கப்பட்டன.
 • Recent Dengue Outbreaks
Year Details of Outbreak
2017The country reported over 180 000 cases and 440 dengue related deaths in 2017. More than 40% of the cases were from the western province and the most affected area with the highest number of reported cases is Colombo District followed by Gampaha, Kurunegala, Kalutara, Batticaloa, Ratnapura and Kandy.
2009In early 2009, nearly 600 cases of dengue, including 5 deaths, were notified over a 3-week period, with most cases arising from the areas of Colombo, Embilipitiya, Gampaha, Kandy, Matale and Ratnapura.
2004Of 15408 cases, 88 deaths occurred (CFR = 0.57%). Cases were reported from 25 districts, with 72% of cases and 78% of deaths from five cities (Colombo, Kandy, Gampaha, Kalutara and Kurunegala) (CFR = 0.4–1.1%).
1996There were 289 cases from the Kurunegala district, and focal outbreaks occurred in the provincial towns of Batticaloa, Galle and Kandy.
1990Of 1350 cases, 363 were serologically confirmed.
1989Of 203 clinically diagnosed cases, 20 deaths occurred (CFR = 9.8%).
1965–68Of 51 cases of DHF, there were 15 deaths. Most towns throughout the country were affected during this outbreak, but the greatest impact was felt in the western coastal belt.

Source: WHO, 2017.

 • 2017 ஆம் ஆண்டில் நாடு 180,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மற்றும் 440 டெங்கு தொடர்பான இறப்புக்களை பதிவு செய்தது. 40 க்கும் அதிகமான நோயாளர்கள்; மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், அதிக எண்ணிக்கையிலான தொற்று நிகழ்வுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளான கொழும்பு மாவட்டம் அதைத் தொடர்ந்து கம்பஹா, குருநாகலை, களுத்துறை, மட்டக்களப்பு, இரத்னபுரி மற்றும் கண்டி மாவட்டங்களில் பதிவானது.
 • 2009 களின் முற்பகுதியில், 3 வார காலப்பகுதியில் 5 இறப்புகள் உட்பட கிட்டத்தட்ட 600 டெங்கு நோயாளிகள் இணங்காணப்பட்டனர். பெரும்பாலான தொற்று நிகழ்வுகள்; கொழும்பு, எம்பிலிபிட்டிய,கம்பஹா, கண்டி,மாத்தளை மற்றும் இரத்னபுரி பகுதிகளிலிருந்து பதிவாகின.
 • 2004 இல் – 15408 தொற்று நிகழ்வுகளில், 88 இறப்புகள் நிகழ்ந்தன. 25 மாவட்டங்களில் இருந்தும் தொற்று நிகழ்வுகள் பதிவாகின. 72 தொற்று நிகழ்வுகள், ஐந்து நகரங்களில் (கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநேகலை) பதிவாகின.
 • 1996 இல் குருநாகலை மாவட்டத்தில் 289 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். மேலும் மாகாண நகரங்களான மட்டக்களப்பு, காலி மற்றும் கண்டி ஆகிய நகரங்களிலும் அதிக நோயாளர்கள் பதிவாகினர்.
 • முக்கிய மலேரியா தொற்றுநோய்:
 1. மலேரியா தொற்றுநோயினால் 1934-35 காலப்பகுதியில் ஒன்றரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
 2. இதன்போது ஏழு மாதங்களுக்குள் 80 000 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்தன.
 3. 1969 ஆம் ஆண்டில் 537,700 பேரும், 1975 ஆம் ஆண்டில் தொற்றுநோய் 400,700 பேரும் மலேரிய தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
 4. அதன்பிறகு, 1983 இல் 127,000 பேரும்,1987 இல் 680,000 பேரும், 1991/ 2 400,000 பேரும், 1999 இல் 290,000 பேரும் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர்.

சர்வதேச தொற்று பரவல்

சர்வதேச தொற்று பரவல் என்பது ஒரு தொற்றுநோய் நிகழ்வுகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பானது பல நாடுகளில் அல்லது கண்டங்களில் அதிக எண்ணிக்கையிலான் பரவுகின்றமையை குறிக்கின்றது.

கடந்தகால பரவல் தொற்றுக்கள்

 • 2009 தொற்று

21 ஆம் நூற்றாண்டின் முதல் இன்ப்ளுவன்சா தொற்று 2009-2010 இல் ஏற்பட்டது. இது ஒரு இன்ப்ளுவன்சா ஏ (R1 N1) வைரஸால் ஏற்பட்டது. தொற்றுநோய் எச் 1 என் 1 இன் பெரும்பாலான நோய்நிலமைகள் லேசானவை என்றாலும், உலகளவில் 2009 ஆம் ஆண்டு தொற்றுநோய் முதல் ஆண்டில் மட்டும் 100000 – 400000 இறப்புகளுக்கு காரணமாக அமைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 • ஏ (எச் 1 என் 1) வைரஸால் ஏற்பட்ட 1918-19 இன்ப்ளுவன்சா, தொற்றுநோய் ஆறு மாதங்களுக்குள் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. இலங்கையில் இந்த இன்ப்ளுவன்சா மூன்று தனித்துவமான அலைகளில் பரவியது.

இலங்கையில் இன்ப்ளுவன்சா கொள்ளைநோய்

இன்ப்ளுவன்ஸா நிகழ்வு முதன்முதலில் ஜூன் 1918 இல் பதிவாகியது, இன்;ளுவன்ஸா மூலமான இறப்பு செப்டம்பர் 1918 இல் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. இலங்கைக்கான பதிவாளர் நாயகம்; 1918-1919 இல் இன்ப்ளுவன்ஸா (நிமோனியா மற்றும் பிற சிக்கல்களைத் தவிர்த்து) காரணமாக 41916 இறப்புகளைப் பதிவாகியதாக குறிப்பிட்டார். 1918 இல் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை எந்த ஒரு வருடத்திலும் இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. இது ஒப்பீட்டளவில் அதிக இறப்பு நிகழ்ந்த் தொற்றுநோயாக கருதப்படுகிறது.

1918 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு, தலைநகரம் மற்றும் பிரதான துறைமுகம், துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் இன்ப்வயன்ஸாவின் முதல் நோய்தொற்றுக்கள் தோன்றின. மேலும் இந்த நோய் அங்கிருந்து நாடுமுழுவதும் பரவியது. தெற்கில் கொழும்பு மற்றும் வடமேற்கில் தலாய்மன்னர் ஆகிய இரண்டு தனித்தனி இடங்கள் வழியாக இந்த காய்ச்சல் இலங்கைக்குள் நுழைந்தது. வடக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கில் உள்ள கடலோர மாவட்டங்களும், கொழும்புக்கு அருகிலுள்ள தென்மேற்கில் உள்ள மாவட்டங்களும் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டன. பின்னர், இந்த நோய் தீவின் உட்புறத்திலும் தெற்கில் உள்ள பிற வட்டங்களுக்கும் பரவியது. இதன் விளைவாக அநேகமாக நோய்தொற்றுக்குள்ளான சுமார் 1.1 சதவீத மக்கள் இறந்திருக்கலாம்.

இம்தொற்று இலங்கையில் மிக அதிக எண்ணிக்கையிலான றப்புகளை ஏற்படுத்தியதுடன் இரு வெவ்வேறு பகுதிகளை பாதித்தது. முதல் மற்றும் ஒப்பீட்டளவில் இலேசான அலை 1918 ஆம் ஆண்டு கோடையில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1918 இலையுதிர்காலத்தில் மிகவும் கடுமையான இரண்டாவது அலை மற்றும் 1919 வசந்த காலத்தில் மூன்றாவது அலையும் ஏற்பட்டது. இரண்டாவது அலை முதல் அலைகளை விட மிகவும் கடுமையான மற்றும் பரவலாக இருந்ததுடன்,அக்டோபர் முதல் டிசம்பர் 1918 வரை நீடித்தது. ஜனவரி மற்றும் பிப்ரவரி 1919 வரை கூட இதன் பாதிப்புக்கள் தொடர்ந்தன.

 • 1957-1958 “ஆசிய காய்ச்சல்” இத்தொற்றானது ஏ (R2N2) வைரஸின் மிதமான் காரணமாக ஏட்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அவை “ஹாங்காங்கில் காய்ச்சல்” (R3N2) எனவும் அழைக்கப்படுகிறது. உளகளாவிய ரீதியில் 1968 இற்குப் பின்; இந்த வைரஸ் காரணமாக 4 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டுள்ளது.