கோவிட் -19 பற்றி
கொரோனா வைரஸ்களில் பல வகைகள் உள்ளன, இவற்றுள் சில தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றன. புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ், SARS-CoV-2, உலகளாவிய சுவாச நோயாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், இது COVID-19 எனவும் அழைக்கப்படுகிறது.
புதிய கோவிட் -19 பரவுதல்
தற்போதைய நிலவரப்படி, பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும் போது காற்றில் வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் புதிய கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை ராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். நீர்த்துளிகள் பொதுவாக ஒரு சில அடிக்கு மேல் பயணிப்பதில்லை, மேலும் அவை சில நொடிகளில் தரையில் விழும் (அல்லது மேற்பரப்பில்) – இதனால்தான் தொற்று பரவுவதைத் தடுப்பதில் பௌதீக ரீதியான தூரம் அல்லது சமூக இடைவெளி பயனுள்ளதாக இருக்;கின்றது என வாதிடப்படுகின்றது.
கோவிட் -19 மனிதர்கள் வழியாக பரவுகிறது
COVID -19 தொற்றானது, சீனாவின் வூஹான் நகரத்தில் 2019 டிசம்பரில் தோன்றியது. இந்த புதிய கொரோனா வைரஸின் சரியான மூலத்தை சுகாதார அதிகாரிகள் இன்னும் கண்டுபிடித்து வந்தாலும், ஆரம்பநிலை கருதுகோள்கள் இது சீனாவின் வூஹானில் உள்ள ஒரு கடல் உணவு சந்தையுடன் தொடர்புடையது என்று குறிப்பிடுகின்றன. ஜனவரி 25 2020 அன்று வெளிவந்த ஒரு ஆய்வில், முதன்முதலில் தொற்றுக்குள்ளான நபர் டிசம்பர் 1, 2019 அன்று நோய்வாய்ப்பட்டார் என்றும் கடல் உணவு சந்தைக்கு நோய் தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிடுகிறது. இந்த வைரஸ் எவ்வாறு உருவானது மற்றும் பரவியது என்பது குறித்து விசாரணைகள் இன்றும் இடம்பெற்று வருகின்றன.
கோவிட் -19 ற்கான நோயரும்பல் காலம்
வைரஸ் பாதிப்புக்குள்ளான 14 நாட்களுக்குள் அறிகுறிகள் மக்களிடையே காணப்படுவதாகத் தெரிகிறது.
COVID-19 உடையவர்களுக்கு இலேசான அறிகுறிகள் முதல் கடுமையான நோய் வரை பலவிதமான அறிகுறிகள் பதிவாகியுள்ளன. வைரஸை வெளிப்படுத்திய 2-14 நாட்களுக்குப் பிறகு இவ்வகை அறிகுறிகள் தோன்றக்கூடும். சமீபத்திய ஆய்வுமுடிவுகளின் படி பின்வரும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு COVID-19 இருக்கலாம்:
- இருமல்
- காய்ச்சல் அல்லது குளிர்
- மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
- தசை அல்லது உடல் வலிகள்
- தொண்டை வலி
- சுவை அல்லது வாசனையின் புதிய இழப்பு
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- சோர்வு
- வாந்தி
- நெரிசல் அல்லது மூக்கு ஒழுகுதல்
COVID-19 பற்றி மேலும் அறியும்போது இந்த பட்டியல் தொடர்ந்து நீண்டு செல்லும். அரிதான அல்லது உச்சகட்ட தாக்க நிலமைகளின் போதுஇ COVID-19 கடுமையான சுவாச பிரச்சினைகள், சிறுநீரக செயலிழப்பு அல்லது இறப்புக்கு இது வழிவகுக்கும்.
கோவிட் -19 ஐக் கண்டறிதல்
உடல் ரீதியான பரிசோதனையின் மூலம் மட்டுமே நோய்த்தொற்றை அறியலாம், ஏனெனில் COVID -19 இன் ஆரம்ப நிலை காய்ச்சல் அல்லது மோசமான சளி போன்றதாக தோன்றக்கூடும். தனால்தான் ஒரு ஆய்வக சோதனையின் பின்னர் COVID -19 நோய் தொற்றை உறுதிப்படுத்த முடியும்
கோவிட் -19 க்கான சிகிச்சை
இப்போதைக்கு, COVID-19 வைரசுக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை முறை எதும் கண்டறியப்படவில்லை. இதனால் COVID-19 இனால் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அத்துடன், கடுமையான நிகழ்வுகள், ஆராய்ச்சி மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 மரணத்தை ஏற்படுத்துமா?
ஜூலை 27, 2020 நிலவரப்படி, COVID -19 காரணமாக உலகளாவிய ரீதியில் 648,966 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும், 9,407,977 பேர் நோயிலிருந்து பூரணகுணமடைந்தும் உள்ளனர். இந்த தகவல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் போர் சிஸ்டம்ஸ் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் எனும் நிவனத்தின் மதிபபீடகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.
இந்த கொரோனா வைரஸ் SARS இலிருந்து வேறுபட்டதா?
SARS என்பது கடுமையான சுவாச நோய் அறிகுறியைக் குறிக்கிறது. 2003 ஆம் ஆண்டில்இ SARS ளு; தொற்றானது சீனாவில் தொடங்கி 2004 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் மற்ற நாடுகளுக்கும் பரவியது. COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் 2003 SARS வைரசை போன்றது: இரண்டும் கொரோனா வைரஸ்கள் என்றாலும் COVID-19, 2003 SARS ஐ விட வேகமாக பரவுவதாகத் தெரிகிறது.
Reference: Johns Hopkins Medicine (JHM). What is Coronavirus? Reviewed by Lauren M. Sauer, M.S. Interim guidance.: JHM July 27, 2020. Available from: https://www.hopkinsmedicine.org/health/conditions-and-diseases/coronavirus