கண்ணோட்டம்
கோவிட் 19 அனுபவமானது, எமது வாழ்வில் சுகாதாரமும், நோய்நிலைகளும் கொண்டுள்ள அடிப்படை வகிபாகத்தினை உணர்த்தியுள்ளது. இருப்பினும், முன்னேற்றகரமான தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆய்வுமுறை தொழிநுட்பத்தின் பங்களிப்பை பெற்று புரிதலை அதிகரித்து கொள்ளவும் நாம் மேலும் போதியளவிலான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. இங்கு நாம் கோவிட் 19 மற்றும் டெங்கு தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்காக பிரத்தியேக வலைத்தளமொன்றினை (disease.lk) உருவாக்கியுள்ளோம்.
.காசநோய் மற்றும் மலேரியா மற்றும் அவற்றின் சூழ்நிலைகள் பிற நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளதுடன், மனிதர்கள் பீடிக்கப்படுதல், சூழல் மற்றும் அதன் மீதான சமூக மற்றும் சுகாதார அதிகாரசபைகளின் பிரதிபலிப்புக்களிலும் பங்கினை கொண்டுள்ளன. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் யாவும் கடந்த இருதசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானரீதியான பரிசீலனைகள், திட்டங்கள் மற்றும் நிபுனத்துவம் பெற்றவர்களது உதவிகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
நோக்கங்கள்
• கோவிட் 19, டெங்கு, மலேரியா மற்றும் காசநோய் தொடர்பான ஆழமான தகவல்கள்
• நோய்கள் தொடர்பிலான கண்ணோட்டம்
• வகைப்பாடுகள், பீடிப்புக்கள் மற்றும் நோய் வெளிப்பாடுகள்
• காலநிலை, நீரியல் மற்றும் சூழல் மீதான தாக்கங்கள்
• சுகாதார மற்றும் நோய் முகாமைத்துவம்
தொடர்பிலான விடயங்களை நாம் வழங்குகியுள்;ளதுடன் நோய்கள் மற்றும் ஆரோக்கியமற்ற சுகாதாரம் தொடர்பிலான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக பல்துறைசார் தரவுகளின் பயன்பாடுகள், கண்காணிப்பு மற்றும் எதிர்வுகூறல் கருவிகள், தரவுத்தள முகாமைத்துவம் மற்றும் பகுப்பாய்வு முறைகள் என்பவற்றையும் விளக்கியுள்ளோம்.
பார்வையாளர்கள்
பாடசாலை மாணவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினர், பல்கலைக்கழக மாணவர்கள், விஞ்ஞானிகள், சுகாதார துறைசார் பணியாளர்கள் மற்றும் பல்வேறு சமூக பிரிவனர்கள் முதலான பயனாளர்களை இலக்காக கொண்டு இத்தகவல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் இதன் மூலம், உதவி முன்தயார்நிலை, இடர் மகாமைத்துவம், தணிப்பு நடவடிக்கைகளை ஊக்கவித்தல், மற்றும் சுகாதார பழக்கவழக்கங்களினை மாற்றியமைத்தல் தொடர்பிலான அறிவு மற்றும் புரிதல்களை உத்வேகப்படுத்த முயற்சிக்கின்றோம்.